'டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றி வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கானது' - பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார். பாஜகவிற்கு வரலாற்று வெற்றியை வழங்கிய டெல்லியின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தனது வணக்கமும் வாழ்த்துக்களும் எனக் குறிப்பிட்டுள்ளார். உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Night
Day