'மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம்-2016' - அமல்படுத்ததாத தமிழ்நாடு உள்ளிட்ட 32 மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம்-2016' அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசிடம் உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.  இவ்வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் பதில் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 8 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day