'வங்கதேச ஊடுருவல்காரர்கள் நிலம் வாங்க உரிமை கிடையாது' - அமித் ஷா திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பழங்குடியினப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு நிலம் வாங்க உரிமை கிடையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டின் செரைகேலாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஊடுருவல்காரர்கள் இந்திய மகள்களை திருமணம் செய்து நிலத்தை அபகரிப்பதாக குற்றம் சாட்டினார். பழங்குடியின பெண்களை திருமணம் செய்து நிலம் வாங்குவதை தடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்றும் ஊடுருவல்காரர்களை விரட்டி விட்டு, அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்போம் என்றும் அமித் ஷா உறுதியளித்தார். ஏற்கனவே, ஊடுருவி வந்தவருக்கும், உள்ளூர் ஆதிவாசி தாய்க்கும் பிறந்த குழந்தைகளுக்குப் பழங்குடியின உரிமைகள் வழங்கப்படாது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day