அகமதாபாத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக அவசர அழைப்பு பெட்டிகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவசர அழைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் 205 இடங்களில் இந்த அவசர அழைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாரேனும் பிரச்னைகளை சந்திக்கும் நிலையில் அவசர அழைப்பு பெட்டியை பயன்படுத்தினால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு செல்லும் என்றும், தொடர்ந்து, உடனடியாக உதவிக்கு போலீசார் வருவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், சராசரியாக ஒருநாளைக்கு 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக அகமதாபாத் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

Night
Day