அசாமில் யாத்திரையை தொடங்கியுள்ள ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 5-வது நாளாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலம் தௌபாலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி யாத்திரையைத் தொடங்கினார். பேருந்து மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில், 15 மாநிலங்கள், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டமன்றத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் என மொத்தமாக 67 நாள்களில் 6 ஆயிரத்து 713 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார். மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, 5-வது நாளாக அசாமில் தொடங்கியுள்ளது. சிவசாகர் நகரில் இருந்து ராகுல்காந்தி தனது யாத்திரையை தொடங்கியுள்ளார். 

varient
Night
Day