அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 15 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 


இடிந்து விழுந்த கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் உடற்பயிற்சி கூடம் இயங்கி வந்ததாக கூறப்படும் நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்த போது பலத்த சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு துயரமடைந்ததாகவும், இந்த விபத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் பல்வேறு மீட்புக் குழுக்கள் ஈடுபடுபட்டுள்ளதாகவும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டாா். 

Night
Day