அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளர் யார்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளரின் பெயரை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்தல் குழு இன்று கூடுகின்றது. 

நாட்டில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையாளராக உள்ள ராஜீவ்குமார், நாளை ஓய்வு பெறுகிறார். அதற்குள் புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு இன்று ஆலாசனை நடத்துகிறது. இந்த தேர்வு குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க உள்ளார். ராஜீவ் குமாருக்கு அடுத்ததாக ஞானேஷ்குமார் மூத்த தேர்தல் ஆணையராக இருப்பதால், அவரே இப்பதவியில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Night
Day