அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரக்கணக்கான மக்களின் தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி-வாகா எல்லையில் பாரம்பரிய முறைப்படி கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

நாட்டின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி மற்றும் வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேசபக்தியுடன் கனத்த பூட்ஸ்களை அணிந்து தலைக்‍கு மேல் காலை உயர்த்தி வீறு நடை போட்டு சென்று கொடி இறக்கினர். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேசபக்தியுடன் முழக்கமிட்டனர்.

Night
Day