எழுத்தின் அளவு: அ+ அ- அ
கவுதம் அதானி கைது செய்யப்பட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகளை அதானி மறுக்கத்தான் செய்வார் என்றாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கிய விஷயம் எனக் கூறினார். நூற்றுக்கணக்கானோர் சிறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதானி மீது அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சிறையில் இருக்க வேண்டிய நபரை மத்திய அரசு பாதுகாத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன், அமெரிக்க பெரும் முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸின் வழிகாட்டுதல் படி காங்கிரஸ் அதானி மீது குற்றம் சாட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.