எழுத்தின் அளவு: அ+ அ- அ
அதிகார பசி கொண்ட கட்சிகள், மக்களால் நிராகரிக்கப்பட்டதாக, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் சிறப்பு வாய்ந்தது என பெருமிதம் தெரிவித்தார். மக்களையும், ஜனநாயகத்தையும் தனது தலைமையிலான பாஜக அரசு என்றுமே மதிப்பதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அதிகார பசி கொண்ட கட்சிகள் பலமுறை மக்களால் நிராகரிக்கப்பட்டதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பேசியதில்லை எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.