எழுத்தின் அளவு: அ+ அ- அ
அனிமேஷன் துறையில் உலகளவில் இந்தியாவை அதிகார மையமாக மாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மாதம் தோறும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், அனிமேஷன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் பாதையில் இந்தியா இருப்பதாக கூறினார். சோட்டா பீம் போல, கிருஷ்ணா, மோட்டு பட்லு, பால் அனுமன் போன்ற நமது அனிமேஷன் சீரியல்களுக்கும் உலக அளவில் ரசிர்கள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கருத்துக்கள் மற்றும் படைப்பாற்றல் போன்றவற்றால், இந்தியாவின் அனிமேஷன் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் உலக அளவில் விரும்பப்படுவதாக அவர் கூறினார். கேமிங் துறையிலும் இந்தியா வேகமாக வளர்ச்ச்சி அடைந்து வருவதாகவும், இந்திய விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமடைந்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.