எழுத்தின் அளவு: அ+ அ- அ
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் கண்டு நாடு கடத்துமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களும் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. மருத்துவ விசாக்கள் உள்ள பாகிஸ்தான் குடிமக்களுக்கு மட்டும் ஏப்ரல்-29ம் தேதி வரை கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கியது. ஆனால் அன்றே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர் அதிகாரிகளுடனான உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மாநில முதலமைச்சர்களையும் தொடர்பு கொண்ட அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.