அமலாக்கத்துறையால் ஊழல் ஒழிப்பு - பிரதமர் பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊழலுக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை தான் பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமலாக்கத்துறை இயக்குனரகம் முழு சுதந்திரத்தோடு செயல்படுவதால், ஊழல் பூஜ்ய விகிதமாக மாறி தனது அரசாங்கத்தில் சிறப்பம்சம் பெறுவதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக அமலாக்கத்துறையை, சுதந்திரமாக செயல்படவிடாமல் காங்கிரஸ் அரசு தடுத்ததாகவும், அப்போது வெறும் 2 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய பிரதமர் மோடி, தற்போதைய பாஜக ஆட்சியில் 10 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு, ஒரு லட்ச கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளதாக தெரிவித்தார். 

Night
Day