அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

663-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 73காசுகளுக்‍கும், டீசல் 92 ரூபாய் 33 காசுகளுக்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day