அமித்ஷா குறித்து விமர்சனம் : நீதிமன்றத்தில் நாளை ஆஜராகிறார் ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைகாரர் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ராகுலின் இந்த கருத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான விஜய் மிஸ்ரா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் நாளை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராகுல் காந்தி ஆஜராக உள்ளதாக அக்கட்சியின் தகவல் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதற்காக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Night
Day