அமித்ஷா குறித்து விமர்சித்த வழக்கு - சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமித்ஷா குறித்து உண்மைக்கு புறம்பான வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. 2018-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, அமித்ஷாவை ஒரு கொலைச் சம்பவத்தில் தொடர்புபடுத்தி விமர்சித்து இருந்தார். இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர், உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்திக்கு, 40 நிமிடங்கள் விசாரணைக்கு பின் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day