அமெரிக்காவின் FBI தேடி வந்த சர்வதேச கடத்தல்காரன் பஞ்சாபில் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் FBI-ஆல் மிகவும் தீவிரமாக தேடப்பட்டு வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனைக் கைது செய்துள்ளதாக பஞ்சாப் காவல்துறை அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், கொலம்பியா, அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு நாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஷெஹ்னாஸ் சிங் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளது.  கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அமெரிக்காவில் அவரது நான்கு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day