அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக்கொலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கன்சாஸ் மாகாணம் செனிகா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் காரசாலா என்பவர் பாதிரியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஆலய நிர்வாக அலுவலகத்தில் பாதிரியாரை சந்திக்க கேரி ஹெர்மேஷ் என்பவர் சென்றிருந்தார். அப்போது அங்கு இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கேரி திடீரென பாதிரியரை சுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாதிரியாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

Night
Day