அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவிற்கு வேறு எந்த நாடுகளும் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாடுகள் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்துள்ளன. இதையடுத்து இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகதீப் தன்கர், இந்தியா வலுவான நீதித்துறை அமைப்பைக் கொண்ட ஜனநாயக நாடு என்றும  இதை எந்த தனிநபராலும், எந்தக் குழுவாலும் சமரசம் செய்ய முடியாது எனக் கூறினார். சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடங்கள் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Night
Day