அமெரிக்க துணை அதிபர் J.D. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார்

எழுத்தின் அளவு: அ+ அ-

 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபருக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் 4 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி, ராணுவ தலைமையக அதிகாரி உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகளும் உடன் வந்தனர்.

டெல்லி விமான நிலையம் வந்த துணை அதிபர் ஜே.டி.வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். தொடர்ந்து சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஜே.டி.வான்ஸ், முப்படைகளின் சார்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். 

Night
Day