எழுத்தின் அளவு: அ+ அ- அ
டாக்டர் அம்பேத்கர் மீது முழு மரியாதையும் பக்தியும் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்திருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் இந்த நிலையில் இருப்பதற்கு அம்பேத்கரே காரணம் என்று கூறியுள்ளார். அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற 10 ஆண்டுகளாக பாஜக அயராது உழைத்து வருவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அம்பேத்கருக்கு எதிராக செய்த செயலை காங்கிரஸ் கட்சி மறைக்க பார்க்கிறது என்று சாடியுள்ளார். அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோல்வியடைய செய்த கட்சி காங்கிரஸ் என்றும் அம்பேத்கருக்கு எதிuhக பிரச்சாரம் செய்து, அவரை தோற்கடிப்பதை கவுரப் பிரச்னையாக மாற்றியவர் நேரு என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் மறுத்தது என்றும் கூறியுள்ளார்.