அயோத்தி : தெருக்களில் இனி துப்பாக்கிச்சூடுகளோ, ஊரடங்கோ இருக்காது - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியின் தெருக்களில் இனி துப்பாக்கிச் சூடுகளோ, ஊரடங்கு உத்தரவுகளோ எதிரொலிக்காது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

ராமர் கோவில் திறப்பு விழாவில் பேசிய அவர், அயோத்தியின் சந்துகளில் இனி தோட்டாக்களின் சத்தங்கள் எதிரொலிக்காது என்றார். இனிமேல் ஊரடங்கு இருக்காது என்றும் தீபோத்ஸவமும் ராமோத்ஸவமும் மட்டுமே நடைபெறும் எனக் குறிப்பிட்டார். 1990-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஆட்சியின்  போது அயோத்தியில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 17 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதனை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில்தான் யோகி ஆதித்யநாத் பேசியதாக கூறப்படுகிறது.

varient
Night
Day