அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக 400-க்கும் மேல் வெல்லவேண்டும் - சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என எம்.பி.யும் அயோத்தி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான லல்லு சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறிய நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற 400 இடங்கள் அவசியம் என பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறிய நிலையில், மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவார் என எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக எம்.பி.க்களின் இந்தப் பேச்சு, தேர்தலில் அந்தக் கட்சிக்கு எதிர்மறையான தாக்கத்தை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Night
Day