இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரான மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, 5 முறை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங், 33 ஆண்டு கால அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வாழ்த்தி, 3 பக்க கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ளார். அதில் மன்மோகன் சிங், எப்போதும் ஹீரோவாக திகழ்வார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...