அரசு மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று சட்டத்தின் கீழ் நடைபெற உத்தரவிட கோரிய மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்து அரசு மருத்துவமனைகளும் உடல் உறுப்பு மாற்று சட்டத்தின் கீழ் நடைபெற உத்தரவிட கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நாடு முழுவதும் ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம்  சாலை விபத்து மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதில 60 சதவீத இறப்பு தலையில் காயம் ஏற்படுவதால் தான் உண்டாகிறது. எனவே அரசு மருத்துவமனைகளில்  உடல் உறுப்பு மாற்று சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கலாம் என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த  நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க  உத்தரவிட்டனர். 

Night
Day