அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை வரும் மார்ச் 4 ஆம் தேதி விசாரணைக்‍கு ஆஜராகுமாறு குறிப்பிட்டு 8 -வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெறுகிறது. இதில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனிடையே, அமலாக்கத்துறையையும், சட்டத்தையும் முதல்வர் கெஜ்ரிவால் அவமரியாதை செய்து வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

varient
Night
Day