அரவிந்த் கெஜ்ரிவால் கைது - எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாட்டில் ஜனநாயகத்தை அழிக்கும் சர்வாதிகார தந்திரம் என, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், கட்சிகளை உடைப்பதும், நிறுவனங்களிடம் பணம் பறிப்பதும், பிரதான எதிர்க்கட்சியின் கணக்குகளை முடக்குவதும் அசுர சக்திக்கு போதாது எனவும், இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வதும் சாதாரண விஷயமாகி விட்டதாகவும் சாடினார். இதற்கு எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தகுந்த பதிலடி கொடுக்கும் என பதிவிட்டுள்ளார். இதேபோல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது பாஜகவுக்கு தெரிந்து விட்டதால், எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடமிருந்து விலக்கி வைக்க முயற்சிப்பதாக சாடியுள்ளார். 

varient
Night
Day