அரவிந்த் கெஜ்ரிவால் கைது - சுதந்திர இந்திய வரலாற்றில் வெட்கக்கேடான சம்பவம் - பிரியங்கா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். இந்த வகையில் அரசியலின் தரத்தை தாழ்த்துவது பிரதமருக்கும், அவரது அரசுக்கும் பொருத்தமானது அல்ல என குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது எனவும், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்ற வெட்கக்கேடான சம்பவத்தை முதல் முறை பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day