அரியானா : பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மகேந்திரகர் பகுதியில் உள்ள ஜிஎல் பப்ளிக் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், மதுபோதையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது உன்ஹானி கிராமத்துக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், பள்ளி இயங்கியது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day