அரியானா: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மனோகர் லால் கத்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியானாவில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய மனோகர் லால் கத்தார், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அரியானா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த மனோகர் லால் கத்தார் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். அவரது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் மனோகர் லால் கத்தார், கமால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனினும் கமால் நாடாளுமன்ற தொகுதியில் மனோகர் லால் கத்தார் போட்டியிடுவார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Night
Day