இந்தியா
"காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டுப்பட்டு விட்டது" - டி.கே. சிவக்குமார் கருத்து...
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான ...
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற பா.ஜ.க.வின் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 இடங்களில் 41 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பா.ஜ.க., போதிய பெரும்பான்மை இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளாக ஜே.ஜே.பி. கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட மோதலால், ஜே.ஜே.பி. கட்சி, பா.ஜ.க.வுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து முதல்வர் பதவியை மனோகர் லால் கத்தார் ராஜினாமா செய்த நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்றார். அவரது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை ஜே.ஜே.பி. கட்சி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான ...
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான ...