எழுத்தின் அளவு: அ+ அ- அ
அருணாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக பெமா காண்டு 3-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
அருணாச்சலபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இதில் மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 46 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்நிலையில் கடந்தமுறை அருணாச்சல் முதலமைச்சராக இருந்த பெமா காண்டே மீண்டும் அப்பதவி ஏற்கவுள்ளதாக பாஜக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நேற்று மாலை ஆளுநர் கைவல்யா திரிவிக்ரம் நேரில் சந்தித்த பெமா காண்டு முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பெமா காண்டு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் கைவல்யா திரிவிக்ரம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி நட்டா, கிரண் ரிஜூஜூ, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வ ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து துணை முதலமைச்சராக சௌனா மேய்ன் பதவியேற்றுக்கொண்டார். அவைத்தொடந்து 10 கேபினட் அமைச்சர்களுக்கும் ஆளுநர் கைவல்யா திரிவிக்ரம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.