அருணாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அருணாச்சலப் பிரதேசம் அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் இந்திய- சீன எல்லையில் சாலை துண்டிக்கப்பட்டது. திபாங் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்த நிலையில், இந்தியா - சீனாவின் எல்லையோர மாவட்டமான திபாங் பள்ளத்தாக்குடனான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Night
Day