இந்தியா
ஏக்நாத் ஷிண்டேவே முதலமைச்சராக தொடர வேண்டும்
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் எனவும், எல்லைக் கட்டுப்பாடு கோடு தாண்டிய பகுதியைத் தங்களின் பிராந்தியமாக உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறிவரும் சீனா, அங்கு இந்திய தலைவா்கள் பயணம் மேற்கொள்ளும்போது எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல், அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பிராந்தியமாகவே அமெரிக்கா அங்கீகரிப்பதாக கூறினார். அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் பல ஆண்டு சம்பிரதாயப்படி ந...