அலக்நந்தா நதி மீது தற்காலிக பாலம் கட்டும் பணி நிறைவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதி மீது தற்காலிக பாலம் கட்டும் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அறிவுறுத்தலின்படி புல்னா கிராமத்தில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப்  பகுதிவரை இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் அலக்நந்தா நதியின்மீது இருந்த பாலம் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்தது. இதனால் புல்னா மற்றும் ஹேம்குண்ட் சாஹிப்  கிராம மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனிடையே  நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

Night
Day