ஆக.21, செப். 4 தேதிகளில் யுஜிசி நெட் மறுத்தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த சூழலில், உதவிப் பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான தகுதியை தீர்மானிக்கும் யுஜிசி நெட் தேர்வு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானதை அடுத்து இந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. 

இதனை தொடர்ந்து, கடந்த 25ஆம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற இருந்த CSIR UGC நெட் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வு முறைகேடு தொடர்பான முழுமையான விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு, ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு மற்றும் NCET தேர்வுகளின் மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

அதன்படி, யுஜிசி நெட் தேர்வு வரும் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதி நடத்தப்படும் என்றும், 

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூலை 25 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்றும் 

NCET தேர்வு வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகள் அனைத்தும் கணினி வழியில் மட்டுமே நடைபெறும் என்றும் ஓ.எம்.ஆர். முறை கிடையாது என்றும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.



Night
Day