ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 2025ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை இந்த புத்தாண்டில் புதுப்பிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகிழ்ச்சியான 2025 என குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.