ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமல் - நிதின் கட்கரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாகனங்கள் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையிலும், சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச் சாவடி கட்டணம் செலுத்துதல் அல்லது ஒரே ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்துதல் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்க உள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

Night
Day