ஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலத்திற்கு கடல் விமான சேவை சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று துவங்கி வைத்தார். 

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் கடல் விமான சேவையை கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணியில் அந்த மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சேவை சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த  சோதனை ஓட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், புதிய அனுபவம் கிடைக்கும் என்று கூறினார். 

Night
Day