ஆந்திரா, தெலங்கானாவில் நிலநடுக்கம் - மக்கள் பீதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மன், பத்ராத்ரி, கொத்தகுடேம், உள்ளிட்ட இடங்களிலும், ஆந்திராவின் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 7.27 மணியளவில் 5 புள்ளி 3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் முலுகு பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலஅதிர்வால் சேதம் எதுவும் இல்லை என கூறப்படும் நிலையில், தெலங்கானா மாநிலம் முலுகுவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் கட்டடங்கள் குலுங்கிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Night
Day