ஆந்திரா : உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத குழந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலத்தில் 4 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நாடிகாமா நகரை சேர்ந்த தம்பதிக்கு பிறந்த குழந்தை கைவல்யா, நான்கு மாதங்களே ஆன நிலையில், காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளும் காணும் திறமையை கொண்டுள்ளது. தனது குழந்தைக்கு சிறப்பு திறமை இருப்பதை அறிந்த தாய் ஹேமா அதனை இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து, தன் குழந்தையின் திறமையை வெளிப்படுத்தும் வீடியோவை நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை கண்ட Noble World Records குழுவினர், இக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என முடிவு செய்த நிலையில் குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது.

Night
Day