ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் 'மிலன்' கடற்படை கூட்டுப் பயிற்சி - அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 50 நாடுகள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா நடத்தும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் 'மிலன்' கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடல் பகுதியில் 9 நாள்களுக்கு இக்கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்திய கடற்படை ஏற்பாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'மிலன்' கூட்டுப் பயிற்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்குப் பின் தற்போது இக்கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாபெரும் கடற்படை கூட்டுப் பயிற்சியை இந்தியா நடத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Night
Day