ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையில் ஏற்படும் தாமதம் குறித்து சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கு  நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.   முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால் வழக்கின் விசாரணை வேண்டுமென்று தாமதப்படுத்தபடுவதாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக விசாரணை தாமதப்படுத்தக் கூடாது என கூறிய நீதிபதிகள், விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட்டனர். மேலும், தாமதத்திற்கான காரணம் குறித்து 4 வார காலத்திற்குள் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய  ஆணையிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Night
Day