ஆம் ஆத்மி கட்சியின் கதை முடிந்துவிட்டது - பாஜக

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து முக்கிய அமைச்சர் விலகியிருப்பதன் மூலம் அந்த கட்சியின் கதை முடிந்து விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது. டெல்லி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், பதவியை ராஜினாமா செய்ததோடு கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். டெல்லில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் பதவி விலகியிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்பி மனோஜ் திவாரி, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய 3 தலைவர்களில் ஒருவராக இருந்த கைலாஷ் கெலாட்டை தொடர்ந்து மேலும் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக கூறினார். இதன் மூலம் ஆம் ஆத்மியின் கதை முடிந்து விட்டதாக அவர் விமர்சித்துள்ளார். 

Night
Day