இடைக்கால தடை உத்தரவுகள் 6 மாதங்களுக்கு பின் தானாக காலாவதியாகாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கீழமை நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவுகள் 6 மாதங்களுக்குப் பிறகு தானாக காலாவதியாகாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்துள்ளது. மேலும், குறிப்பட்ட காலத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடை உத்தரவுகளில் குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அவை தானாக காலாவதியாகிவிடும் எனவும், அதன்பிறகு அந்த வழக்குகளின் விசாரணைகளை கீழமை நீதிமன்றங்கள் தொடங்கலாம் எனவும், 2018-ம் ஆண்டு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day