இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்துக்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்டு விவகாரம் வைரல் ஆன நிலையில் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6E 2195 விமானத்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேறினர். தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள விமானங்கள் நிறுத்தும் இடம் பகுதியில் அமர்ந்தபடி உணவும் சாப்பிட்டனர். இந்த காட்சி இணையத்தில் வைரலானதையடுத்து, இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையில் 1 கோடியே 20 லட்ச ரூபாய் விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. மீதமுள்ள 30 லட்ச ரூபாய் அபராதத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதித்துள்ளது.

Night
Day