இந்தியர்களை ரஷ்யாவிற்கு கடத்தும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சிபிஐ நடத்திய சோதனைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியர்களை ரஷ்யாவிற்கு கடத்தும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சிபிஐ நடத்திய சோதனைகள், மூலம் உக்ரைனுக்கு எதிரான போரில் இளைஞர்கள் ஏமாற்றப்பட்ட மோசமான வழிகள் தெரியவந்துள்ளன. சிலருக்கு டெலிவரி பாய் வேலை என்றும் மற்றவர்கள் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணிபுரிவார்கள் என்றும் முகவர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் போர்முனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு அதிக மனிதவளம் தேவைப்படுவதால், அந்த நாடு அவர்களுக்கு  உத்தியோகபூர்வ அரசு அடையாள அட்டை வழங்கும் என்றும், அது அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் இளைஞர்களிடம்  கூறி ஏமாற்றி அனுப்பி வைத்துள்ளனர். இது சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Night
Day