இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 20% வளர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்த நேரடி வரி வருவாய் 15 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வசூலாகி, 20 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது திருத்தப்பட்ட முழு நிதியாண்டுக்கான வரி வசூல் மதிப்பீட்டில் 80 சதவீதம் ஆகும். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான கணக்கீட்டின்படி மொத்த நேரடி வரி வசூல் 18 லட்சத்து 38 ஆயிரம் கோடி எனவும், இது முந்தைய ஆண்டில் இதே கால கட்டத்தில் வசூலானதைக் காட்டிலும் 17.3 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வா்த்தக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி 9.1 சதவீதமும், தனி நபா்களிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி 25.6 சதவீதமும் வளா்ச்சி பெற்றுள்ளது. 

Night
Day