இந்தியாவில் பாகிஸ்தான் எக்ஸ் தளம் முடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று X நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Night
Day