இந்தியாவில் 2-வது முறையாக மனிதனை தாக்கிய பறவைக்காய்ச்சல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் 4 வயது சிறுமி, பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு, எச்9 என்2 ரக பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாத தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுமி தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன்மூலம் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, இரண்டாவது முறையாக இந்தியாவில் மனிதருக்கு பறவை காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Night
Day